அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது!

சட்ட சபை தேர்தல் நெருக்கி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டபேரவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் கருதப்படுகின்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள், பிரசாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அத்துடன், அதிமுக கட்சி சார்ந்த அரசியல் நிகழ்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றைய கூட்டம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This