முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ஓட்டங்களை எடுத்தது. செதிகுல்லா அடல் 45 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 64 ரன்களும், இப்ராகிம் ஸத்ரன் 45 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களும் சேர்த்தனர்.
தான் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 151 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூப் 34, பஹர் ஸமான் 25, கேப்டன் சல்மான் ஆகா 20 ரன்கள் சேர்த்தனர். ஆட்ட நாயகனாக இப்ராகிம் ஸத்ரன் தேர்வானார்.