பொது மக்களுக்கான அவசர எச்சரிக்கை – முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்
பொதுமக்கள், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, முடிந்தவரை முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது
நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128 இற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.