
அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு
டிட்வா புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 367 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக 3 லட்சத்து 9 ஆயிரத்து 607 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
