உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மதிப்பீட்டு செயல்முறை குறித்து கருத்து வெளியிட்ட அமித் ஜெயசுந்தர, “மாணவர்களின் தொடர்ச்சியான படிப்புகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், மதிப்பீட்டு நடவடிக்கைகளை நடத்துவதற்கான ஒரு கட்ட அணுகுமுறையை செயல்படுத்தியுள்ளோம்” என்றார்.
உயர்தரப் பரீட்சை முடிவுகளை இறுதி செய்வதற்கான நிலையான செயல்முறைக்கு பொதுவாக நான்கு மாதங்கள் எடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
“எங்கள் நோக்கம் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுகளை வெளியிடுவதாகும். மேலும் மதிப்பீட்டிற்குத் தேவையான நேரத்தை குறைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.