நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (19) பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (19) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, காலை 09.30 முதல் மாலை 06.00 வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
காலை 09.30 முதல்10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் மாலை 06.30 வரை 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.