”இப்போது அவசரப்படுவதில்லை”…சமந்தாவின் அதிரடி முடிவு

”இப்போது அவசரப்படுவதில்லை”…சமந்தாவின் அதிரடி முடிவு

பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் நடித்துவிட்டார். தமிழில் இவர் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அண்மையில் தனியார் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சமந்தா தனது படத் தெரிவு குறித்து கூறியிருந்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், “தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது இலகுவானது தான். ஆனால், ஒவ்வொரு திரைப்படத்திலும் அதுதான் கடைசிப் படம் என்ற அடிப்படையில் நடிக்க ஆசைப்படுகிறேன். இனிமேல் சவாலான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன். படங்கள் தெரிவில் பலவிதமாக யோசிக்கிறேன். அவசரப்படுவதில்லை” எனக் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This