நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – பொலிஸார் வலைவீச்சு

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – பொலிஸார் வலைவீச்சு

ஐ.டி. ஊழியர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் பிரபல நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், லட்சுமி மேன்ன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும், நடிகை லட்சுமி மேனன் அக்கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து ஐ.டி ஊழியரை கடத்திய கும்பலைச் சேர்ந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனா மோல் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனிடம் பொலிஸார் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இத்தகவலை அறிந்து லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன் பிறகு கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This