நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் தாயார் காலமானார்

இலங்கைகை பூர்வீகமாக கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் தாயார் கிம் பெர்னாண்டஸ் காலமானார்.
சிறிது காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (06) மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் காலமானதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 24 ஆம் திகதி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அன்று முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கிம் பெர்னாண்டஸ் மலேசிய மற்றும் கனேடிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், அவர் பஹ்ரைனில் விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தார்.
அவர் முன்பு 2022 ஆம் ஆண்டு இதேபோன்ற உடல்நல நெருக்கடியை எதிர்கொண்டார், அங்கு அவர் பஹ்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.