திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக காதல் சுகுமார் மீது நடிகை முறைப்பாடு
காதல் திரைப்பட நடிகர் சுகுமார் மீது நடிகை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நடிகையொருவர் ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு சுகுமாரை சந்தித்து அவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே திருமணம் ஆனதை தன்னிடம் மறைத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த மூன்று வருடங்களாக நகை, பணம் உள்ளிட்டவற்றை வாங்கியதாகக் கூறியுள்ளார்.
மேலும் தற்போது தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று கூறி தன்னைத் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றப் பார்க்கிறார் என அந்த துணை நடிகை முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னை ஏமாற்றி பணம், நகை உள்ளிட்டவற்றை பெற்ற காரணத்துக்காக சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடபழனி பொலிஸ் நிலையத்தில் குறித்த நடிகை முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.