‘லிவர் சிரோசிஸ்’ பாதிப்பு…உதவி கோரும் நடிகர்

தனுஷின் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் அபிநய்.
திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் மற்றும் பின்னணிக் குரல் கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.
சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் தற்போது விலர் சிரோசிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் வயிறு வீங்கி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். தற்போது தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மேல் சிகிச்சைக்காக ரூபாய் 28 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் உதவி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
https://x.com/i/status/1897356492241809747