புது காதலியுடன் நடிகர் ரவி மோகன்?அட இந்த பொண்ணா

ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானதால், சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார் ரவி மோகன். இவர், தனது மனைவியை விவாகரத்து செய்வதாக வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சமயத்தில்தான், இவர் பாடகியும் ஸ்பிரிச்சுவல் ஹீலர் என்று சொல்லப்படும் கெனீஷாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. இதையடுத்து தங்களுக்குள் நட்பைத்தாண்டி வேரொன்றும் இல்லை என இருவரும் கூறினர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு திருமண நிகழ்வில் ஒரே நிற ஆடை அணிந்து வந்திருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின், பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருக்கிறார், ஐசரி கணேஷ். இதுவரை LKG, மூக்குத்தி அம்மன் உள்பட பல படங்களை தயாரித்து வழங்கியிருக்கிரார்.
இப்போது அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படமும் இவரது தயாரிப்புதான். இவரது மகளுக்கு திருமணம் நடந்தது.
ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் கமல்ஹாசன், வெற்றிமாறன், சுந்தர்.சி, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஹைலைட் மணப்பெண்-மணமகள்தான் என்றாலும், அவர்களை தாண்டி பலரது கவனத்தை ஈர்க்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
ரவி மோகன் தங்க நிற பட்டு வேட்டி-பட்டு சட்டை அணிந்து வர, அவருடன் வந்திருந்த ஒரு பெண் அதே தங்க நிற புடவையை அணிந்திருந்தார்.
இவரை எங்கேயே பார்த்தது போல இருக்கிறதே என்று உற்றுப்பார்த்தவர்கள், “அட, இது அந்த பொண்ணாச்சே” என்று கண்டுபிடித்திருக்கின்றனர். இவரது பெயர், கெனிஷா.
கடந்த ஆண்டு, ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக தெரிவித்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை முடிவுற்றதற்கான காரணம் என்னவென்று இருவரும் வெளிப்படையாக கூறவில்லை.
இந்த விவாகரத்து அறிவிப்பிற்கு பின்பு, ரவி மோகன் கெனிஷாவுடன் கோவாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.
ரவி மோகன்-கெனிஷா இடையே காதல் என கிசுகிசு எழுந்த நிலையில் இருவருமே தங்களுக்குள் நட்பை தாண்டி எதுவும் இல்லை என்று மறுத்தனர். ஆனால், பிறந்தநாளின் போது இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டுக்கொண்டனர்.
“அதான் வெறும் நண்பர்கள்ன்னு சொல்லிட்டாங்களே..: என மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில், ரவி மோகன் திருமண நிகழ்வில் கெனிஷாவுடன் கலந்து கொண்டிருப்பதால், இவர்தான் அவரது புது காதலியோ என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் ரவி மோகன் தனது பெயரை மாற்றி, புது படங்களில் கமிட் ஆகி வேறு வாழ்க்கையை பார்த்துக்கொண்டு போக, ஆர்த்தி இன்னும் தனது பெயருக்கு பின்னால் ‘ரவி’ என்று எழுதி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் இருந்து தனது கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளாரே தவிர, ‘ஜெயம் ரவியின் மனைவி’ என்பதை மனதில் இருந்தும் பயோவில் இருந்தும் தூக்காமல் இருக்கிறார்.
ஆர்த்தி சமூக வலைதளங்கில் இருந்து விலகியிருந்து மீடியாக்களின் கண்களில் படாமல் இருக்கிறார்.
இவரது குடும்பம் (முக்கியமாக தாயார்) ரவி மோகனிடம் டாக்ஸிக் ஆக நடந்து கொண்டதுதான் இவர்களின் திருமண முறிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் ஆர்வ் மற்றும் அயான் என இரு பிள்ளைகள் உள்ளனர்.