நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தங்களுக்கிடையேயான பிரச்சனை குறித்து அறிக்கை எதுவும் இனி வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ரவி மோகன் தன்னை கலந்தாலோசிக்கவில்லை என கூறி ஆர்த்தி அதிர்ச்சியை கிளப்பினார். ஆர்த்தி மற்றும் அவரது தாயின் கட்டுப்பாட்டில் ரவி மோகன் இத்தனை வருடம் இருந்ததாகவும் அவரது சொத்துக்களை ஆர்த்தி அபகரித்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதே நேரம் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனுக்கு இருந்த தொடர்பே இந்த விவாகரத்திற்கு காரணம் என்றும் பேசப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ரவி மோகன் மற்ற்றும் ஆர்த்தி இருவரும் தங்கள் குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்களை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.

தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். அதைபோல ஆர்த்தி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கும் தன் இரு மகன்களுக்கு ஜீவனாம்சம் வழங்க ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்கு பதில் அளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்தார். இந்நிலையில் தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடைவிதிக்கக்கோரி, ரவிமோகன் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ரவிமோகன் தாக்கல் செய்த மனு மீது தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதன்படி தங்களுக்கு இடையேயான பிரச்சனை குறித்து ரவிமோகன், ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதேபோல ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இரு தரப்பினரும் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This