நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வருகிறார்.

இறுதியாக, இவர் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், திரைப்பட நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்தே வருகிறார்.

இந்த நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள கவுண்டமணியின் இல்லத்தில் இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கவுண்டமணி நடித்துவருகின்றார். அவர் மனைவியின் மறைவுக்குத் திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share This