பொலிஸ் சேவைக்கு 7500 பேரை இணைக்க நடவடிக்கை
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 7500 பேரை புதிதாக பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட பொலிஸ் அதிரடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபள், பெண் பொலிஸ் கான்ஸ்டபள், பொலிஸ் கான்ஸ்டபள் சாரதி உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு www.police.lk என்ற இணையத்தளத்தில் ‘எங்களுடன் இணையுங்கள்’ (join us)
என்பதை அழுத்தி அல்லது கீழுள்ள குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் விண்ணப்பபடிவம் பகுதிக்கு சென்று ஒன்லைன் ஊடாக மாத்திரம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விண்ணப்பதாரர்கள் மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதனூடாக அறிந்துகொள்ள முடியுமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
071-8591925
011-2505202
011-2552953
