மறைத்து வைத்துள்ள அரிசிக் கையிருப்பு தொடர்பில் அதிரடி சோதனை நடவடிக்கை

மறைத்து வைத்துள்ள அரிசிக் கையிருப்பு தொடர்பில் அதிரடி சோதனை நடவடிக்கை

அரிசிக் கையிருப்பை மறைத்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை அவதானம் செலுத்தி வருகிறது.

அதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தொகை மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளதுடன் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வரையில் இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன.

பண்டிகைக் காலங்களில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நுகர்வோர் அதிகார சபையின் சட்டங்களை மீறும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுகர்வோருக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் “1977” என்ற அவசர இலக்கத்துக்கு முறைப்பாடுகளை வழங்க முடியும்.

மேலும், கீரி சம்பா மற்றும் சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் மறைத்து வைத்திருக்கும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Share This