சாணக்கிய நீதிப்படி இந்த அறிகுறிகள் கெட்ட சகுனமாகும்

சாணக்கிய நீதிப்படி இந்த அறிகுறிகள் கெட்ட சகுனமாகும்

வீட்டில் ஏதேனும் கெட்ட விடயங்கள் நடக்கப் போகிறது என்பதை சில அறிகுறிகளை வைத்து நம்மால் கணிக்க முடியும். அந்த வகையில் சாணக்கிய நீதியின்படி சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

சாணக்கியரின் கூற்றுப்படி சில அறிகுறிகளைக் கொண்டு நம் வாழ்வில் கெட்டது நடக்கப்போகிறது என்பதைக் கணிக்க முடியும். அதுகுறித்து பார்ப்போம்.

உங்கள் வீட்டில் எப்பொழுதும் சண்டை, சச்சரவுகள் இருந்துகொண்டே இருப்பின்  வீட்டின் நிதி நிலை மிகவும் மோசமாகும் எனக் கூறப்படுகிறது.

பொதுவாக பலரின் வீட்டு முற்றத்தில் துளசி செடி வளர்ப்பார்கள். துளசிச் செடி புனிதமான ஒரு செடியாக கருதப்படுகிறது. இவ்வாறிருக்க திடீரென நாம் வளர்த்துவரும் துளசிச் செடி வாடினால் உங்களுக்கு பொருளாதார பிரச்சினை வரப்போவதாக அர்த்தம்.

மேலும் வீட்டில் கண்ணாடி உடைவது, ஒரு கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறான பல அறிகுறிகள் நமக்கான கெட்ட சகுனத்தை பிரதிபலிப்பதாக சாணக்கிய நீதி கூறுகிறது.

Share This