
தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு நெடுஞ்சாலையின் 183 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (16) காலை 7.00 மணியளவில் விபத்தொன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு நோக்கிச் சென்ற லொறியின் பின்பக்க டயர் வெடித்ததில் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தின் போது லொறியில் ஏற்றிச்சென்ற மரக்கறிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
