
ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஹட்டன் குடாகம பகுதிக்கு அருகில் இன்று (17) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற லொறி, பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முற்பட்டபோதே, டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் காயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளான லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளன.
லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
