பெலியத்த – வீரகெட்டிய வீதியில் விபத்து – 16 மாணவர்கள் படுகாயம்

பெலியத்த – வீரகெட்டிய வீதியில் விபத்து – 16 மாணவர்கள் படுகாயம்

பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் சில மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share This