நேஹின்ன பிரதேசத்தில் விபத்து – இருவர் உயிரிழப்பு
களுத்துறை, தொடங்கொடை, நேஹின்ன பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, நேஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வில்பாத்த பிரதேச வைத்தியசாலை மற்றும் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்யதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.