கல்லாறு பகுதியில் விபத்து – ஏழு பேர் படுகாயம்
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள கல்லாறு பகுதியில் நேற்று இரவு சிறிய ரக பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் படுகாயம் அடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் வண்டியே இந்த விபத்து சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.