நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவும் : நாமல் வலியுறுத்து

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவும் : நாமல் வலியுறுத்து

” ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை கட்டம், கட்டமாக நீக்குவதைவிட, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்துசெய்வது மேலானது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” நாட்டின் தேவைக்காக அல்ல தனிநபர்களை இலக்கு வைத்தே என்.பி.பி. அரசு தனது கொள்கையை செயற்படுத்திவருகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்சவை அரச வாசஸ்தலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த ஜனாதிபதிகளினதும் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்று துறைக்கு இருக்கும் அதிகாரம் இவ்வாறு கட்டம், கட்டமாக நீக்குவதைவிட நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது நல்லது. ஏனெனில் இன்று அரச ஊழியர்களால்கூட சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. 15 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவொன்றுக்காககூட சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.” – எனவும் நாமல் குறிப்பிட்டார்.

மஹிந்தவை வீட்டில் இருந்து வெளியேற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. நாம் முன்பைவிட பலமாக இருக்கின்றோம். மேலும் வலுவடைந்துவருகின்றோம்.” – என நாமல் மேலும் கூறினார்.

Share This