பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலி

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் அந்த ஹோட்டலில் ஒரு அறையில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் எழுதிய ஒரு கடிதமும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில், “மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்ந்து விட்டேன் .. நான் எப்போதும் மனதால் வருந்திக் கொண்டிருக்கிறேன்…” என்று எழுதப்பட்டுள்ளது.