கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பயணித்த வாகனம் மோதியில் பெண் ஒருவர் உயிரிழப்பு
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (ACTC) நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனம் புத்தளம் பொலவத்தை சந்தியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வாகனம் பாதசாரி கடவையில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் இருந்து புத்தளம்-கொழும்பு வீதியூடாக யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பில் வாகனத்தின் சாரதி வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.