அளுத்கமயில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் காயம்

அளுத்கமயில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் காயம்

களுத்துறை – அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (09) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் வேன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில், வேனை செலுத்திய பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Share This