விமானத்தில் விமானப் பணிபெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த யாழ்ப்பாணம் நபர் கைது

விமானத்தில் விமானப் பணிபெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த யாழ்ப்பாணம் நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான தென்னாப்பிரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் மாலுமியாக பணிபுரியும் 49 வயதான அந்த நபர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் நேற்று துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்த விமானத்தில் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாகவும், விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானப் பணிப்பெண் உடனடியாக விமானிக்குத் தகவல் அளித்தார், அதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு தடயவியல் மருத்துவப் பரிசோதகரிடம் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This