வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!
![வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்! வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!](https://oruvan.com/wp-content/uploads/2025/02/IMG-20250204-WA0009.jpg)
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தரவை வழங்க வேண்டும் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் இன்று செவ்வாய்கிழமை சர்வதேச கவனயீர்ப்பு போராட்டமொன்றை லண்டனில் முன்னெடுத்தனர்.
இலங்கையில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இதனை கரிநாளாக கருத வேண்டும் என இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் வாழும் ஈழ மற்றும் உலக தமிழர்களும் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து போராட்டமொன்றை லண்டனில் முன்னெடுத்தனர்.
‘தன்னாட்சிக்கான உரிமைக்குரல்’ என்ற தொனிப்பொருளில் கீழ் இந்த போராட்டத்தை தமிழர்கள் முன்னெடுத்தனர்.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பிரித்தானிய அரசு தார்மீக அடிப்படையில் காத்திரமான அரசியல் இராஜதந்திர நகர்வை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உலகத்தமிழினமாக அணிதிரண்டு சுதந்திர தமிழீழத்திற்காகப் போராடுவோம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் அறைகூவல் விடுத்தனர்.