சுவிட்சர்லாந்திலிருந்தின் அனர்த்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது

சுவிட்சர்லாந்திலிருந்தின் அனர்த்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது

சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அனர்த்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானமொன்று இன்று (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த நிவாரணப் பொதிகளில் நீர் சுத்திகரிப்புக் கருவிகள் மற்றும் அவற்றின் செயற்பாட்டிற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 17 பொதிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த நிவாரணப் பொருட்களை உத்தியோகப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வில், இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்தின் பிரதித் தூதுவர் ஒலிவியர் பிராஸ் (Olivier Praz) கலந்துகொண்டார்.

இவருடன், நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, சுவிட்சர்லாந்தின் இந்த மனிதாபிமான உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )