பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் உள்ள லூசோனில் இன்று திங்கட்கிழமை காலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கவியல் நிறுவனமான Phivolcs, இலோகோஸ் மாகாணத்தின் வடக்கு நகரமான பாங்குயில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு Phivolcs அறிவுறுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை, ஆனால் பின்அதிர்வுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலின் “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ள பிலிப்பைன்ஸில் நிலநடுக்கங்கள் பொதுவானவை, அங்கு எரிமலை செயல்பாடுகள் மற்றும் பூகம்பங்கள் அடிக்கடி நிகழ்கிறமை குறிப்பிடத்தக்கது.