
கொத்மலையில் பாதிக்கப்பட்ட குழுவொன்று கட்டுநாயக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர்
கொத்மலையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட குழுவொன்று இந்திய விமானப்படையின் ஹெலிகப்டரில் மீட்கப்பட்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட MI-17 ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி இன்று (01) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதனிடையே, நுவரெலியா மற்றும் கொத்மலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 1,844 கிலோ உலர் உணவுப் பொருட்களையும் அதே ஹெலிகாப்டரில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
