ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபல மண்டபத்தில் பாரிய தீ விபத்து

ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபல மண்டபத்தில் பாரிய தீ விபத்து

ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபலமான நிகழ்வு மண்டப வளாகமான தப்ரோபெனில் இன்று (06) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பிரபல அழகுக்கலை நிபுணர் சண்டிமல் ஜெயசிங்க ஏற்பாடு செய்திருந்த ‘சி.ஜே. ரோயல் புத்தாண்டு ஈவ் 2025’ நிகழ்வின் போது தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், நிகழ்வில் பங்கேற்றிருந்த மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், மேலும் பல தீயணைப்பு வாகனங்கள் சம்ப இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This