திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் மீது முறைப்பாடு செய்த பிரபல நடிகை!

திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் மீது முறைப்பாடு செய்த பிரபல நடிகை!

அண்மைக் காலமாக மலையாள திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுந்தன.

அந்த வகையில் அண்மையில் நடிகை பூனம் கவுர் தெலுங்கு இயக்குநர் திரி விக்ரம் மீது சமூக வலைத்தளத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

இவ்வாறிருக்க முறைப்பாடு அளிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் திரைப்பட கலைஞர்கள் சங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரிவிக்ரம் மீது திரைப்பட கலைஞர்கள் சங்கத்திடம் நான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எனது தொழிலை மட்டுமின்றி ஆரோக்கியம் மகிழ்ச்சி ஆகியவற்றையும் கடுமையாக பாதித்துள்ளது.

எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை ஆதரிப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள குறித்த சங்கத்தின் பொருளாளர்,

“இது தொடர்பில் எம்எம்ஏவுக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடு அளிக்காமல் இணையத்தில் பதிவிடுவதால் எதுவித பயனும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

Share This