கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் – 18 பேர் படுகாயம்

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் – 18 பேர் படுகாயம்

கனடா – டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னியாபோலிஸில் இருந்து வந்த டெல்டா விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததாக விமான நிலையம் உறுதிப்படுத்தியது.

இந்த விபத்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:15 மணியளவில் நடந்தது, விபத்தை அடுத்து இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஒப்பீட்டளவில் பாரிய காயங்களும் ஏற்படாததற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று கிரேட்டர் டொராண்டோ விமான நிலைய ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா பிளின்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், விமானம் விபத்துக்குள்ளானமைக்காக காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This