வங்குரோத்தடைந்த நாடு மூன்றே மாதங்களில் காப்பாற்றப்பட்டது – சுனில் ஹந்துன்னெத்தி கருத்து
வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை ஒரு சில மாத காலப்பகுதிக்குள் இவ்வாறானதொரு நிலைக்கு கொண்டுவர முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
கடனுதவி பெற முடியாமல், துறைமுகத்திற்கு வருகைத் தந்த எரிபொருள் கப்பலுக்கு பணம் செலுத்த முடியாமல் இருந்த நாடு இன்று நாடாக மூச்சு விட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் தமது அரசாங்கத்தின் கலந்துரையாடல்கள் பத்து நாட்களில் நிறைவு செய்யப்பட்டதாகவும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யும் யோசனையில் அவ்வாறு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமது குழுவின் தலையீடு மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு கூட ஆச்சரியமடைந்ததாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.