கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் கடலோர நகரமான ஃபெர்ண்டேலில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கலிபோர்னியா மற்றும் ஓரிகானுக்கு முதலில் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது, ஆனால் பின்னர் எச்சரிக்கையை மீளப் பெற்றுள்ளதுஇ.
நிலநடுக்கத்தை அடுத்து ஹம்போல்ட் கவுண்டியில் 10,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் தடைகள் பதிவாகியுள்ளன, ஆனால் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை.
இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஒவ்வொரு ஆண்டும் மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பதிவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் ஆதாரங்களை வழங்க அவசர நிலையை அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.