வீதி தடுப்பில் மோதுண்ட பஸ்….51 பேர் உயிரிழப்பு

வீதி தடுப்பில் மோதுண்ட பஸ்….51 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்க நாடானா கவுதமலாவில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பஸ் வீதியோர தடுப்பின் மீது மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பாலத்திலிருந்து விழுந்த பஸ் கழிவு நீரினால் மாசுபட்ட ஆற்றில் விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பஸ்ஸிலிருந்து சுமார் 51 பேரின் உடல்களை மீட்புப் பணியினர் மீட்டுள்ளனர்.

குறித்த பஸ் எல் ப்ரோக்ரெசோவிலுள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரிலிருந்து கவுதமாலா நகருக்கு சென்றுகொண்டிருந்தபோதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

Share This