ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 2025 உலக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ( 10) இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
இன்று காலை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்குப் புறப்பட்டுள்ளதை விமான நிலையப் பொறுப்பதிகாரிகள் உறுதிப்படுத்தினார்.
இந்த பயணம் மேன்மைமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உட்பட 13 அரச அதிகாரிகள் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.
அவர்கள் இன்று காலை 10:10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் EK-651 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்பட்டனர்.
இந்தப் பயணம் இன்று முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தித் துறையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.