கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு –  சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலஅதிர்வு நேற்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹோண்டுராசின் வடக்கே, கேமன் தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 130 மைல் தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வுக்குப்பின்னர் கரீபியன் கடல் மற்றும் ஹோண்டுராசின் வடக்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளில் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நிலநடுக்கத்தால் உருவான “அபாயகரமான சுனாமி அலைகள்”, கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியிலிருந்து 620 மைல்களுக்குள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு பதற்றம் நிலவுவதாக சர்வசே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share This