கிரிஷ் கட்டிடத்தில் இரண்டாவது நாளாகவும் தீ விபத்து

கிரிஷ் கட்டிடத்தில் இரண்டாவது நாளாகவும் தீ விபத்து

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் இரண்டாவது நாளாக மீண்டும் தீப்பற்றியுள்ளது.

நேற்று (07) இரவு கிரிஷ் கட்டிடத்தின் 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு கிரிஷ் கட்டிடத்தின் 35வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக இரவு 7 மணியளவில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக கொழும்பு மாநகர சபை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This