பொதுஜன பெரமுன சஜத் அணிக்கு சவால் கிடையாது – ரஞ்சித் மத்தும பண்டார
![பொதுஜன பெரமுன சஜத் அணிக்கு சவால் கிடையாது – ரஞ்சித் மத்தும பண்டார பொதுஜன பெரமுன சஜத் அணிக்கு சவால் கிடையாது – ரஞ்சித் மத்தும பண்டார](https://oruvan.com/wp-content/uploads/2025/02/ranjith.jpg)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்கு சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
” அனைவருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் மொட்டு கட்சி செயல்படுகின்றது. அவர்களின் நடவடிக்கை எமக்கு சவால் கிடையாது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணையையே கட்சி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். சிலர் எதிர்த்தபோதிலும், பெரும்பாலானவர்கள் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் எவ்வித மாற்றமும் வராது. சஜித் பிரேமதாசவே தலைவர். அவருக்கே மக்கள் ஆதரவு உள்ளது.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.” – என்றார்