டிஜிட்டல் புரட்சி – ‘Govpay’ திட்டம் நாளை ஆரம்பம்

டிஜிட்டல் புரட்சி – ‘Govpay’ திட்டம் நாளை ஆரம்பம்

டிஜிட்டல் கொடுப்பனவு முறை ‘Govpay’ திட்டத்தை நாளை பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது

இலங்கையின் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமாக ‘GovPay’ திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது,

இந்த “முயற்சி அரச நிறுவனங்கள் பணம் செலுத்தும் முறையை நெறிப்படுத்தி நவீனமயமாக்கும், பாதுகாப்பான மற்றும் திறமையான டிஜிட்டல் தளத்தின் மூலம் தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்தும்” என அரசாங்கம் கூறுகிறது.

வருவாய் சேகரிப்பு செயல்முறைகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்தத் திட்டம்.

GovPay ஆரம்பத்தில் 16 அரசு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 30 நிறுவனங்கள் இரண்டு கட்டங்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2025 க்குள் முழுமையாக செயல்படுத்தப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பயன்பாடுகள் அல்லது ஒன்லைன் வங்கி தளங்கள் மூலம் அரச சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த இந்த முறைமை பொதுமக்களுக்கு உதவும்.

இந்த முறைமையூடாக வீண்விரயம், மோசடிகளை தடுக்க முடியும் எனவும் அரச வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் டிஜிட்டல் புரட்சி இலங்கையில் ஏற்படுத்த முடியும் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

Share This