யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
![யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-06-131040.png)
யாழ்ப்பாணத்தில் 100 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை யாழ். குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் குருநகர் தடாகத்தில் உள்ள மண்டித்தலை தீவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பிலேயே குறித்த இரு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று புதன்கிழமை காலை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் 100 கிலோவும் 270 கிராம் கேரள கஞ்சாவையும் கொண்டுசெல்லும் போதே இவ்வாறு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு 24 மற்றும் 27 வயது இருக்கும் என்றும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(செய்தி – தனுஷா)