சீன – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு – இருநாட்டு உறவை பலப்படுத்த ஆலோசனை

சீன – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு – இருநாட்டு உறவை பலப்படுத்த ஆலோசனை

(செய்தி – கோ.திவ்யா)

சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சீனா சென்றுள்ளார்.

சீனா விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக நேற்று முன்தினம் (04) சீனா சென்றார்.

ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வருமாறு தனது நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு சீனா விடுத்த அழைப்பின் பிரகாரம் பாகிஸ்தான் ஜனாதிபதி இந்த அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நேற்று புதனக்கிழமை தலைநகர் பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை சந்தித்தும் அவர் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் தீவிரமாக ஆலோசித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share This