டெங்கு தொற்றுநோயாக மாறும் அபாயம்
டெங்கு நோய் ஒரு தொற்றுநோய் நிலைமையாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுட தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் எந்தவொரு பிரதேசத்திலும் டெங்கு நுளம்பு குறைவடைவதாக அறிவிக்கப்படவில்லை, ஆகவே, எந்தவொரு நேரத்திலும் டெங்கு நோய் ஒரு தொற்றுநோயாக மாற வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டெங்குவைப் அதிகளவில் பரப்பும் நுளம்புகளின் எண்ணிக்ரள குறைவடையவில்லை என்பதை அடையாளம் காண்பதற்கான அறிகுறியாக, சிக்கன்குனியா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளதை காணலாம் என அவர் வலியுறுத்தினார்.
இவ்விரு நோய்களையும் பரப்பும் காரணி ஒரே இனத்தைச் சேர்ந்தவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி அதன் பரவலைக் குறைப்பதே என சமில் முதுகுட தெரிவித்தார்.