ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவிக்கு உயர் பதவி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவிக்கு உயர் பதவி

கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க, நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் பதவிக்கு அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அவர் இந்த நியமனத்தை ஏற்றுக் கொண்டாரா என்ற விடயம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் கூட அவருக்கு அந்தப் பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பல பதவிகள் வெற்றிடமாக உள்ளதால், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத் தலைவர்களுக்கான நியமனப் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This