இன்று முதல் உத்தரவாத விலையில் நெல்

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல்
அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற் களஞ்சியசாலைகளில் இன்று (06) முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை நேற்று (05) அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் கிலோ ஒன்று 132 ரூபாய்க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்போகத்துக்கான நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுப் பல வாரங்கள் கடந்து விட்டதாகவும், தனியார் தரப்பினர் மிகக்குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையிலேயே, நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டு இன்று முதல்  கொள்முதல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Share This