ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் – அரசாங்கம் தீர்மானம்

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் – அரசாங்கம் தீர்மானம்

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டுவர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று புதன்கிழமை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

Share This