அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

சீனா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் சீனாவும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரிகளை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள வரிகளுக்கு மேல் 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது.

இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா ஆரம்பித்துள்ளது..

இதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு 15 சதவீத மேலதிக வரியை விதித்துள்ளதுடன்
எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10 சதவீத வரியை சீனா விதித்துள்ளது.

இதன்மூலம் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே மீண்டும் ஒரு வர்த்தக போர் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

Share This