இது சுண்டுவிரல் இரகசியம்
![இது சுண்டுவிரல் இரகசியம் இது சுண்டுவிரல் இரகசியம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/85126955.webp)
கை ரேகைகளை வைத்து ஒருவரின் வாழ்க்கை முறையை எவ்வாறு கூற முடிகிறதோ அவ்வாறே விரல்களின் அளவும் தீர்மானிக்கிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. அதிலும் சுண்டு விரல் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து சில குணாதிசங்கள் வெளிப்படும்.
சிறிய சுண்டு விரல்
மோதிர விரலின் கோட்டுக்குக் கீழ் உங்கள் சுண்டு விரல் இருந்தால் உங்கள் சொந்த பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து நடப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மற்றவர்களை புரிந்து கொள்வீர்கள்.
சரிசமமான சுண்டு விரல்
மோதிர விரலின் கோட்டுடன் உங்கள் சுண்டு விரலின் கோடு சமமாக இருந்தால் நீங்கள் ஒழுக்கம் மற்றும் சுய விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். ஆழ்மனதின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உங்களை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது.
மோதிர விரலின் முதல் கோடுக்கு மேல் சுண்டு விரல்
உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் முதல் கோட்டை விட நீளமாக இருந்தால் நீங்கள் நம்பிக்கை மற்றும் உத்வேகத்துடன் செயல்படக் கூடியவர்கள். உங்கள் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்வீர்கள்.